search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதே தி.மு.க. அரசின் சாதனை-முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
    X

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசிய காட்சி.

    உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதே தி.மு.க. அரசின் சாதனை-முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    • புதிதாக எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதே தி.மு.க. அரசின் சாதனை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    • 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம், விருதுநகர் சட்டமன்ற தொகுதி சிவகாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி. ஆர். மன்ற துணைச்செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

    இதில் 500 பேருக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் அவர் ேபசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் மூடுவிழா கண்டதுதான் தி.மு.க.வின் சாதனை ஆகும். தி.மு.க. ஆட்சியில் புதியதாக எந்ததிட்டமும் கொண்டு வரவில்லை. எழுதாத பேனாவுக்கு சிலை வைக்க முடிவு செய்ததும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியதும்தான் தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை ஆகும்.

    ஈரோட்டில் தி.மு.க. வெற்றி பெற்றது தனிக்கதை. அங்கு அ.தி.மு.க. 44 ஆயிரம் வாக்குகள் பெற்றதுதான் உண்மையான வெற்றி. வாக்காளர்களையே அடைத்து வைத்து வாக்கு செலுத்த முடியாமல் செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், வரதராஜன், வேண்டு ராயபுரம் சுப்பிரமணி, அனைத்துலக எம்.ஜி. ஆர். மன்ற துணைச்செயலாளர் கலாநிதி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் விஜயகுமரன், முகம்மது நைனார், கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், கருப்பசாமி, டாக்டர் விஜயஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்ட ஏற்பாடுகளை சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி செய்திருந்தார்.

    Next Story
    ×