என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![காளீஸ்வரி கல்லூரியில் தொழில்முனைவோர் நிகழ்ச்சி காளீஸ்வரி கல்லூரியில் தொழில்முனைவோர் நிகழ்ச்சி](https://media.maalaimalar.com/h-upload/2023/02/28/1842770-untitled-1.webp)
காளீஸ்வரி கல்லூரியில் தொழில்முனைவோர் நிகழ்ச்சி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழில்முனைவோர் நிகழ்ச்சி நடந்தது.
- இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வெற்றிகரமான தொழில்முனைவோர்" என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் அமர்வை ஏற்பாடு செய்தது. மதுரை ஜனஜா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் ஜான்லாரன்ஸ் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வணிக உலகில் மாறுபட்ட மற்றும் பரந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் பங்கேற்பாளர்களை கதையின் மூலம் ஊக்கப்படுத்தினார்.
தொழில்முனைவோரால் வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களை அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வரவேற்றார்.
உறுப்பினர் முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.தொழில் தொடக்க செயல் ஒருங்கிணைப்பாளர் நாகேசுவரி நன்றி கூறினார்.
இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.