என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அணைகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
- விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மேலும் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. விருது நகர், சிவகாசி, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக் கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை மாவட்டத்தில் மொத்தமாக 500 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.
இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகள், நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கண்மாய்களுக் கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இது விவசாயி களுக்கு மகிழ்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது. அவர்கள் விவசாய பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிக ரித்துள்ளது. செண்பக தோப்பு சாலையில் அணைத்தலை, முடங்கி ஆற்றில் நீர் நிரம்பி செல் கிறது. மறுங்கூர் கண்மாய், ஆதியூர் கண்மாய், புதுக் குளம், பிரண்டைகுளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் முள்ளிக் கடவு, மாவரசியம்மன் கோவில், நீராவி பகுதிகளில் கனமழை பெய்ததால் 6-வது மைல் குடிநீர் தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
ராஜபாளையம் பகுதி யில் அய்யனார்கோவில் ஆறு, பேயனாறு, முள்ளி ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு ஆற்று நீரை கோடை கால குடிநீர் ஏரிக்கு திருப்பி விட்டு வீணாகாமல் சேமித்து வருகின்றனர். தேவதானம் சாஸ்தாகோவில் அணை நிரம்பி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராக்காச்சி அம்மன் பாறை பகுதிகளில் தண்ணீர் கொட்டுவதால் அங்கு பொதுமக்கள், பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் மலை பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகி றது. பிளவக்கல் பெரியார் அணையில் 32 அடிக்கும், கோவிலாறு அணையில் 8 அடிக்கும், வெம்பக் கோட்டையில் 13 அடி அள விற்கும், கோல்வார்பட்டி யில் 11 அடி அளவிற்கும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குல்லூர் சந்தை அணையில் நீர்மட்டம் 8 அடியை கடந்து நிரம்பி வழிகிறது. சாஸ்தா கோவில் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
திருச்சுழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று விடிய, விடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் பரளச்சி அருகே உள்ள செங்குளம் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக அப்பகுதி யில் உள்ள பல்வேறு சிறு ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டடு அதன் காரணமாக செங்குளம் பகுதியிலுள்ள விளை நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
சுமார் 30 ஏக்கர் பரப்பள விலான மிளகாய், வெங் காயம், சோளம், உளுந்து மற்றும் மல்லி உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ேமலும் 2 நாட்களுக்கு மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணைகள், நீர்தேக்கங் களில் மேலும் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்றைய மழை நிலவரம் மில்லி மீட்டரில்:
வெம்பக்கோட்டை 49.5
கோவிலாங்குளம் 39
அருப்புக்கோட்டை 12
பிளவக்கல் 10.2
ராஜபாளையம் 26
திருச்சுழி 18.2
ஸ்ரீவில்லிபுத்தூர் 9
சிவகாசி 4.8
விருதுநகர் 3
சாத்தூர் 3
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்