search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
    X

    போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் கோமதி அழகு நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப் பலகை இலக்கிய மன்றமும், முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், மகாராசபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியருமான ஜான்சன் ரத்தினராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் மாணவர்கள் தங்கள் அனுபவத்தைப் பள்ளியில் படிக்கும் போதே பெறுகின்றனர். கல்லூரியில் படிக்கும் போது போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் அனுபவத்தையும் பெறுகின்றனர்.

    படிக்கும்போதே வாழ்க்கை முழுவதும் பயன்படும் கல்வி என்பதை உணர்ந்தே படிக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே போட்டித்தேர்வுக்கான வழிகாட்டுதல்களையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் தங்கள் நேரத்தை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் செலவழிக்காமல் போட்டித் தேர்வுகளுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் சங்கர் வரவேற்றார். துறைத்தலைவர் அமுதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் கோமதி அழகு நன்றி கூறினார். இதில் தமிழியல் துறையைச் சேர்ந்த 78 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    Next Story
    ×