search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறைச்சி கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை
    X

    இறைச்சி கடையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    இறைச்சி கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை

    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • இந்த சோதனையின்போது 35 வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் துறை ஆணையர், அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில் எடையளவு சட்டத்தின் கீழ் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 15 வியாபாரிகள் மீதும், எடையளவுகள் மறு முத்திரையிடப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 17 வியாபாரிகள் மீதும், தராசின் எடையினை சரிபார்க்க வியாபாரிகள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடைக் கற்கள் வைத்திருக்காத 3 வியாபாரிகள் மீதும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறைச்சி மற்றும் மீன் கடைகளில் எடை அளவுகள் தொடர்பான சிறப்பாய்வு மீண்டும் வருகிற 25-ந் தேதி நடைபெறும். எனவே இறைச்சி மற்றும் மீன்கடை வியாபாரிகள் தங்களது எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திைர ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்.

    நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562-225130 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), 1/13சி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.இந்த சிறப்பாய்வில் சிவகாசி தொழிலாளர் துணை ஆய்வாளர் முத்து மற்றும் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்களான தயாநிதி, உமாமகேசுவரன், செல்வராஜ். திருமதி.அ.பாத்திமா, துர்கா, முருகன், முருகவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    Next Story
    ×