என் மலர்
உள்ளூர் செய்திகள்
காதல் ஜோடி மாயம்
- காதல் ஜோடி மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் மாரீஸ்வரி(வயது19). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் படிப்பவர் சங்கரப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமஜெயம் என்பவரின் மகன் தனுஷ்வரன்(20), மாரீஸ்வரியும், தனுஷ் வரனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி மதியம் வீடு திரும்பவில்லை.
பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். மாலையில் அவரது சகோதரர் பிரேம்குமாருக்கு செல்போனில் மாரீஸ்வரி அழைத்துள்ளார். கல்லூரியில் உடன் படிக்கும் தனுஷ்வரனை காதலித்த தாகவும், அவருடன் சென்றிருப்பதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறினார். இதுகுறித்து பிரேம்குமார் பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தந்தை பாலமுருகன் சங்கரப்பநாயக்கன்பட்டிக்கு சென்று ராமஜெயத்திடம் விசாரித்துள்ளார். அப்ேபாது ராமஜெயம் தனக்கும் இப்போதுதான் தனது மகன் அழைத்ததாகவும் தன்னுடன் படிக்கும் மாரீஸ்வரியை அழைத்து சென்றிருக்கிறேன். அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து இரு வீட்டாரும் காதல்ஜோடியை பற்றி பலரிடம் விசாரித்தும், அவர்களை பல இடங்களில் தேடியும் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்றும் தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து மகளை மீட்டு தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.