search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு கடைகளுக்கு புதியகட்டுப்பாடுகள்
    X

    பட்டாசு கடைகளுக்கு புதியகட்டுப்பாடுகள்

    • பட்டாசு கடைகளுக்கு புதியகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
    • கடைகளில் மின் அணைப்பான் கருவி பொருத்தி ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இக்குழுவில் நாக்பூர் எரிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி குமார், நாக்பூர் நேஷனல் பயர் சர்வீஸ் கல்லூரி இயக்குனர் சவுத்ரி, தொழில்நுட்ப ஆலோசகர் நாராயணன், பொறியாளர் உமேத் சிங், பனாரஸ் இந்து பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் தியா சங்கர் பாண்டே, தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் (டான்பாமா)கணேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.

    இக்குழுவினர் பட்டாசு தொழிலில் புதிய தொழில்நுட்பத்து டன் கூடிய பாதுகாப்பு, வெளிநாடுகளில் உள்ள பட்டாசு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பட்டாசு தொழிலை மேம்படுத்துவது குறித்து அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் மத்திய தொழில், வர்த்தக அமைச்சகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசின் தொழில், வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து ஏற்கனவே 4 முறை குழுவினர் பங்கேற்ற கலந்துரையாடல், ஆலோசனைக் கூட்டம் இணைய வழியில் நடந்தது. அதில் பட்டாசு கடைகள் நடத்துவதற்கான புதிய விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில் 5 முறை இணைய வழியில் நடந்த கூட்டத்தில், பட்டாசு கடைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இறுதியாக தீர்மானிக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதுபற்றி டான்பாமா தலைவர் கணேசன் கூறியதாவது:-

    பட்டாசு கடைகளில் 2 கே.ஜி. கொள்ளளவு உள்ள 10 மீட்டர் தூரம் பீய்ச்சி அடிக்க கூடிய தீயணைப்பான் வைக்க வேண்டும். கடைகளில் மின் அணைப்பான் கருவி பொருத்தி ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

    விபத்து ஏற்பட்டால் உடனே தீயணைப்பு துறை, போலீசுக்கு தகவல் தெரிவிக்க சிக்னல் லேயர் அமைக்க வேண்டும். கடையில் 500 லிட்டர் தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும். கடை உரிமையாளர், தொழிலாளர்கள் பாதுகாப்பு பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

    விபத்து ஏற்பட்டால் உடனடியாக அலாரம் அடிக்க ஐ.எஸ்.ஓ., தரச் சான்று கருவி பொருத்த வேண்டும். எளிதில் தீப்பிடிக்காத மின் வயர் சுவிட்சுகளை கடைகளில் பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகள் தீர்மானிக்கப்பட்டு, மத்திய அரசிடம் பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×