search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கங்கை கரையில் குப்பை கிடங்கை அகற்ற போராடும் ராஜபாளையம் வழக்கறிஞர் ராம்சங்கர்
    X

    வழக்கறிஞர் ராம்சங்கர்

    கங்கை கரையில் குப்பை கிடங்கை அகற்ற போராடும் ராஜபாளையம் வழக்கறிஞர் ராம்சங்கர்

    • கங்கை கரையில் குப்பை கிடங்கை அகற்ற ராஜபாளையம் வழக்கறிஞர் ராம்சங்கர் போராடுகிறார்.
    • அரசும் அதிகாரிகளை கண்டிக்க வேண்டும் என்பதை உணரவேண்டும்.

    ராஜபாளையம்

    கடந்த 2015ஆம் ஆண்டு புனிதமான கங்கை நதி கரையில் மிகப்பெரிய அளவில் குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந் திருக்கிறது. இவை கங்கை நதியில் கலக்கக்கூடாது என்பதை தடுக்க கோரி ராஜ பாளை யம் வழக்கறிஞர் ராம்சங்கர் தேசிய பசுமை தீர்ப்பா யத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் மேற்படி குப்பை கிடங்கை அகற்ற கோரி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதுகுறித்து வழக்கறிஞர் ராம்சங்கர் கூறியதாவது:-

    5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் உத்தரவை செயல்படுத்தாத உத்தர காண்ட் அரசின் தலைமை செயலாளர் ஒரு மாத காலத்திற்குள் மேற்கண்ட குப்பை கிடங்கை அகற்றி அதன் அறிக்கையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அவரது சம்பளம் நிறுத்தப்பட வேண்டும் என 2018-ல் உத்தரவிடப்பட்டது.

    ஆனால் இன்று வரை கங்கை நதிக்கரையில் கொட்டப்பட்டும் மேற்படி மலை போல் குவிந்துள்ள குப்பை கிடங்கு அகற்றப் படாமல் உள்ளது. அதை எதிர்த்து தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், அரசு மூத்த அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு 27 செப்டம்பர் 2023ல் விசார ணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசார ணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், 6 வாரத்திற்குள் மேற்கண்ட குப்பை கிடங்கை அகற்ற வேண்டும். ஆறு வாரக் காலத்திற்குள் அரசு அதிகாரிகள் நீதிமன்ற த்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அரசு அதிகாரி களின் அலட்சியம், பொறுப்பு இல்லாமல் இருப்பது போன்றவை அரசுக்கே கெட்டப் பெயரை ஏற்படுத்தும். இதுபோன்ற உத்தரவுகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று அரசும் அதிகாரிகளை கண்டிக்க வேண்டும் என்பதை உணரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×