search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக செய்து முடிக்க உத்தரவு
    X

    மகாராஜபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக செய்து முடிக்க உத்தரவு

    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டும்.
    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நமக்கு நாமே திட்டம் மூலம் தாட்கோ காலனி தெருவில் ரூ.18 இலட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு அடிப்படை சாலை கட்ட மைப்பு திட்டத்தின் கீழ் 10-வது வார்டில் ரூ.25 இலட்சம் மதிப்பிலும் பேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய் பணிகள் நடைபெற்று வரு வதையும், 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ், ஆதிதிராவிடர் காலனியில் ரூ.28 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவா கவும், தரமாகவும் முடிக்கு மாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர், சுந்தரபாண்டியம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பேரூராட்சி பகுதிகளில் அடிப் படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திடக் கழிவு மேலாண்மை திட்டத்தினை திறம்பட செயல்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர் களுடன் கலெக்டர் ஆய்வு செய்து, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளு டன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அள வில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

    தொடர்ந்து, வத்திராயி ருப்பு வட்டம், மகாராஜபுரத் தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்று வரு வதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், செயல் அலுவலர் உஷா கிரேசி, பேரூராட்சித் தலைவர் ராஜம்மாள், துணைத்தலைவர் இந்துஜா, வார்டு உறுப்பினர்கள், உதவி பொறியாளர், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×