search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு அபராதம்
    X

    விருதுநகரில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் குழந்தை தொழிலாளர் தடுப்பு படை உறுப்பினர்்்் கூட்டம் நடந்தது.

    குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு அபராதம்

    • விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை யில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி இருதயராணி முன்னிலையில் விருதுநகர் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் படை உறுப்பினர்களுக்கான காலாண்டுக் கூட்டம் நடந்தது.

    குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கை மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வு விவரம் குறித்து விருதுநகர் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அலுவலர்/தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    தொழிலாளர் துறையால் 1.10.2021 முதல் 31.10.2022 வரை கடைகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் மாவட்ட தடுப்புப் படை குழு மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பாய்வில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய ஒரு நிறுவனம் மற்றும் சட்டத்திற்கு முரணாக 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத்தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 39 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேற்படி காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 5 கடைகள் நிறுவனங்கள் மீது ரூ.85 ஆயிரம் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டது.

    18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்திய 32 நிறுவனங்கள் மீது ரூ.2 லட்சத்து60 ஆயிரம் விருதுநகர் மாவட்ட கலெக்டரால் அபராதம் விதிக்கப்பட்டது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறையால் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் மாவட்ட தடுப்புப் படை குழு மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பாய்வில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 4 தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் சட்டத்திற்கு முரணாக 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 8 தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மீதும் தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது.

    மேற்படி காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 2 தொழிற்சாலைகளின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்திய 4 தொழிற்சாலைகளின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் 1098 என்ற சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டது.

    சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, விருதுநகர் மற்றும் சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குநர்கள் சித்ரா, ஸ்ரீதரன், இசக்கிராஜா மற்றும் தொழிலாளர் துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    Next Story
    ×