search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி
    X

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகள் குடும்பத்திற்காக பழயை கார் ஒன்றை வாங்க முடிவு செய்தார். அது குறித்து டீக்கடை ஒன்றில் நண்பரிடம் பேசி கொண்டி ருந்தார்.

    அப்போது சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற சீட்டிங்குமார் அங்கு வந்தார். சீனிவாசன் பேசி கொண்டிருப்பதை பார்த்து தலைமை செயலகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள காரை வாங்கி தர முடியும் என்றும், அதற்கு இனதால் ரூ. ரூ.6¾ லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

    அதனை நம்பிய சீனிவாசன் உடனடியாக அவரது செல்போன் எண்ணிற்கு ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் வாகன பதிவுக்காக ரூ.25 ஆயிரத்து 750 தேவை என்று ரமேஷ்குமார் கூறி உள்ளார். உடனடியாக சீனிவாசன் பணம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு மேலும் ரூ.1 லட்சம் தேவை என்று கூறி ரமேஷ்குமார் பெற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் காரை பார்க்க வேண்டும் என சீனிவாசன் கேட்டுள்ளார். அப்போது பதிவு எண் தெரியாத சில வாகனங்களின் படங்களை ரமேஷ்குமார் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் கார் வாங்குவதை உறுதி செய்ய மேலும் ரூ.1 லட்சம் வேண்டும் என ரமேஷ்குமார் கேட்டுள்ளார்.

    சந்தேகமடைந்த சீனிவாசன் ரமேஷ்குமாரிடம் கார் வாங்குவதை உறுதி செய்ய ேவண்டும். இல்லையெனில் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திர இமடைந்த ரமேஷ்குமார் கோபமாக பேசியுள்ளார். மேலும் கான்பிரன்ஸ் அழைப்பில் வேறு ஒருவரை பேச செய்து சீனிவாசன் குறித்து ஐ.ஜி.யிடம் புகார் கொடு்க்க உள்ளதாக மிரட்டியுள்ளார்.

    இதனை தொடர்ந்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×