search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேற்கு தொடர்ச்சி மலையில் பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள்
    X

    செங்காந்தள் மலர்கள்

    மேற்கு தொடர்ச்சி மலையில் பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள்

    • ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
    • மலர்கள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தமிழக அரசின் மலரான செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கி உள்ளன. ராஜ பாளையம் அய்யனார் கோவில், தேவதானம் சாஸ்தா கோவில் மற்றும் செண்பகத் தோப்பு சாலை போன்ற பகுதிகளில் இந்த மலர்கள் வண்ணமயமாக பூத்துக் குலுங்குகின்றன.

    கார்த்திகைப் பூ எனவும், கண்வழிப்பூ எனவும் செங்காந்தள் மலர்களை அழைப்பதுண்டு. நெற்பயிர்களை தாக்க வரும் பூச்சி வண்டுகளை இந்த பூக்களை ஆங்காங்கே கட்டி எல்லையாக அமைத்தால் பூச்சி வண்டு போன்றவை தாக்காமல் இருக்கும்.

    மேலும் சித்த மருத்து வத்தில் செங்காந்தள் மலர்களின் வேர், பூ போன்ற பகுதிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. புற்றுநோய், காச நோய் உள்பட பல்வேறு நோய்களை தீர்க்கவல்ல இந்த செங்காந்தள் மலரின் கிழங்குகள் பல்வேறு நபர்க ளால் செடியை வேருடன் பிடுங்கி கிழங்கை எடுத்து விட்டு செடிகளை ஆங்காங்கே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.

    இதன் காரணமாக செங்காந்தள் மலர்கள் பூத்த பத்து தினங்களுக்குள்ளேயே இவைகள் அழியத் தொடங்கி விடுகின்றன.

    கார்த்திகை மாதம் முடிந்த பின்னர் அந்த செடிகளை கண்டறிந்து கிழங்குகளை தோண்டி எடுத்து சித்த மருத்துவத்திற்கு பயன்படுவது வழக்கம். ஆனால் சிலர் கார்த்திகை மாதம் பிறந்த உடனே இப்பூக்களை கண்டு கிழங்கு களை தோண்டி எடுத்து சென்று விடுவதால் இந்த செங்காந்தள் மலர்கள் இனம் அழியும் அபாயத்தில் உள்ளது.

    தமிழக அரசு மற்றும் வேளாண் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி செங்காந்தள் மலர்கள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×