search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைப்பணிகள் 6 மாதமாக கிடப்பில் போட்டதாக பொதுமக்கள் சிரமம்
    X

    குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் தேளி-மானாமதுரை இடையேயான சாலை.

    சாலைப்பணிகள் 6 மாதமாக கிடப்பில் போட்டதாக பொதுமக்கள் சிரமம்

    • நரிக்குடி ஒன்றிய சாலைப்பணிகள் 6 மாதமாக கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
    • விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் தேளி-மானாமதுரை எல்லை வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலான சாலையானது மிகவும் சேத மடைந்து மோசமான நிலை யில் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்தநிலையில் தேளி, தர்மம், கொட்டகாட்சியேந் தல், பூவாக்கன்னி, கனைய மறித்தான் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளி லிருந்து மானாமதுரை வரை சென்று பின்னர் தமிழகத் தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக இந்த சாலையைத்தான் பிரதான மாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த பகுதிகளிலிருந்து கல்லூரி, பள்ளிக்கூடம், கட்டிட வேலைக்கு செல் வோர் என பல்வேறு தரப்பி னரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சாலையானது நரிக்குடி யூனியன் அலுவலக கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தேளி-மானாமதுரை எல்லை வரையிலான சாலை போடும் பணிக்காக ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கப் பட்டு ஆறு மாத காலமாகியும் சாலைப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத் திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மோசமான இந்த சாலை யால் கார், இருசக்கர வாக னம் போன்ற வாகனங் கள் அடிக்கடி பழுதாகி நிற்ப தோடு பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு பொது மக்களும் தாங்கள் செல்லும் இடங்களுக்கு குறித்த நேரத் திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.

    விருதுநகர்-சிவகங்கை மாவட்ட எல்லைக்கு இருபுற மும் உள்ள சாலைப்பணிகள் நிறைவடைந்து பயன்பாட் டிற்கு வந்த நிலையில் ஒன்றிய நிதியிலிருந்து சாலைப்பணிக்காக தேவை யான நிதி ஒதுக்கப்பட்டும் நரிக்குடி யூனியன் கட்டுப் பாட்டிலுள்ள தேளி-மானா மதுரை எல்லை வரையி லான ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலான சாலைப்பணிகள் மட்டும் கிடப்பிலேயே போடப்பட் டுள்ளதால் கடல் தீவு போல காட்சியளிப்பதாகவும் அப் பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ள னர்.

    சமீப காலமாக நரிக்குடி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக கிடப்பில் போடப்பட்டு வரும் சாலைப்பணிகள் குறித்து நரிக்குடி யூனியன் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கண்டுகொள் ளாதது தங்களுக்கு மிகுந்த மன வேதனையளிப்பதாக வும் பொதுமக்கள் தெரி வித்தனர்.

    ஆகவே தேளி-மானா மதுரை எல்லையில் நரிக் குடி யூனியனிற்கு உட்பட்ட சாலைப்பணியை உடனடி யாக நிறைவேற்றி விரைவில் பொதுமக்களின் பயன்பாட் டிற்கு கொண்டு வர நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×