என் மலர்
உள்ளூர் செய்திகள்
தென்னை விவசாயிகளுக்கு கருத்தரங்கு
- தென்னை விவசாயிகளுக்கு கருத்தரங்கு நடந்தது.
- 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூரில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னையில் அறிவியல் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டல் குறித்து கருத்தரங்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
வேளாண்மை இணை இயக்குனர் பத்மாவதி தலைமை வகித்தார். உதவி இயக்குனர் தனலட்சுமி வரவேற்றார். தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் அறவாழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தென்னையில் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள், காப்பீடு, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் காப்பீடு, நலத்திட்டங்கள், குறித்து பேசினார்.
பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் வீரபத்திரன் தென்னை சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களை குறித்து பேசினார். பேராசிரியர் தங்கபாண்டியன் தென்னை ரகங்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், வேளாண் விற்பனை துறை அலுவலர் மகாலட்சுமி, தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டல் செய்வது குறித்தும், ஒழுங்குமுறை விற்பனை குழு கண்காணிப்பாளர் உமா மகேஸ்வரி, இ-நாம் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.