search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்
    X

    தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

    • அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடந்தது.
    • காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்தது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவுபடி அருப்புக்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை, அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் இணைந்து நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

    காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள இ.எஸ்.ஐ. அல்லது பி.எப்.திட்டத்தில் உறுப்பினர் இல்லாத கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுனர்கள், சமையல் பணியாளர்கள், நெசவாளர்கள், சாலையோர வியாபாரிகள், சலவைத்தொழிலாளர்கள், முடி திருத்தபவர்கள் பங்கேற்கலாம்.

    அதேபோல் தையல் தொழிலாளர்கள், பனைமர தொழிலாளர்கள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், வாகனம் பழுது நீக்கும் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பொற் கொல்லர்கள் மற்றும் இதர அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பங்கேற்று பதிவு செய்து பயன் பெறலாம்.

    அந்த முகாமில் பதிவதற்கு ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×