என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் சிறப்புச்சொற்பொழிவு
- ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் சிறப்புச்சொற்பொழிவு நடந்தது.
- இதில் சினிமா டைரக்டர் கஸ்தூரி ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
சிவகாசி
சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர்ஓர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் திரைப்பட விமர்சன அமைப்பு ஆங்கிலத்துறை (சுயநிதிப்பிரிவு) மற்றும் முதுகலை தமிழாய்வுத்துறை இணைத்து ''புழதிக்காட்டு வேலிகள்'' என்ற தலைப்பில் சிறப்புச்சொற்பொழிவை நடத்தியது.
முதல்வர் பழனீசுவரி தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறைத்தலைவரும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான சோபனாதேவி வரவேற்றார். திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். தமிழின் மேல் கொண்ட அதீத அன்பினால் நான் ''பாமர இலக்கியம்'' என்ற புத்தகத்தை படைத்ததாகப் குறிப்பிட்டார்.
பெண் உயிரூட்டி, உணர்வூட்டி அரவணைத்துச் செல்லும் பெருங்கொடையானவள். பெண்கள் ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்திராகாந்தி, நிர்மலா சீத்தாராமன் போன்றவர்களை போல் திறமையாக செயல்பட்டு பெண் இனத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
மாணவிகளின் வினாக்களுக்கு விளக்கம் அளித்தார். தமிழ்த்துறை தலைவரும், மற்றொரு ஒருங்கிணைப்பாளருமான பொன்னி நன்றி கூறினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை சினிமா விமர்சன குழு உறுப்பினர்களும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களும், தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.