என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட வாலிபரை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பார்த்து நலம் விசாரித்தார்.
முதுகுதண்டு அறுவை சிகிச்சை
- ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதுகுதண்டு அறுவை சிகிச்சை நடந்தது.
- தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு நேரில் சென்று வாலிபரை பார்த்து நலம் விசாரித்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 29). இவர் கடந்த 7-ந்தேதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக ராஜபாளையம் தென்காசி ரோட்டில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார் .
அவருக்கு முதுகுத் தண்டில் அடிபட்டுள்ளதை அறிந்த டாக்டர்கள் முதன் முறையாக ராஜ பாளையம் அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்தனர். இதை வெற்றி கரமாக செய்துமுடித்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
தற்போது மாரியப்பன் நலமாக உள்ளார். அறுவை சிகிச்சை நடைபெற்றதை அடுத்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு நேரில் சென்று வாலிபரை பார்த்து நலம் விசாரித்தார். மேலும் சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இதில் தலைமை மருத்துவர் மாரியப்பன், மருத்துவர் சுரேஷ், திருமுருகன், சேத்தூர்சேர்மன் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ராஜசோழன், கருப்பழகு, தேவதானம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






