search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறு, சிறு நிறுவனங்களுக்கு  மானிய கடன்கள்
    X

    விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தகள், கடனுதவி, மானிய கடனுதவிக்கான காசோலைகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். அருகில் மாணிக்கம் தாகூர் எம்.பி., கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன் ஆகியோர் உள்ளனர். 

    குறு, சிறு நிறுவனங்களுக்கு மானிய கடன்கள்

    • விருதுநகரில் குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.84 லட்சம் மதிப்பில் மானிய கடன்களை அமைச்சர் வழங்கினார்.
    • மாணிக்கம் தாகூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், முன்னிலை வகித்தனர்.

    விருதுநகர்

    சென்னையில் வருகிற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு விருதுநகரில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட அளவி லான கள நிகழ்வு நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாணிக்கம் தாகூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கடனுதவி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

    5 தொழில் முனை வோர்களுக்கு ரூ.6.81 கோடி திட்ட மதிப்பிலான கடனுத விகளையும், 34 தொழில் முனைவோர்களுக்கு ரூ.84.48 லட்சம் மதிப்பில் மானியத்திற்கான காசோ லைகளையும், 114 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1524.82 கோடி மதிப்பில் மாவட்ட த்தில் முதலீடு செய்து தொழில் புரிவ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்க ளையும் அமைச்சர் வழங்கினார். பின்னர் அமைச்சர் கூறுகையில், தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொரு ளாதாரம் கொண்ட மாநில மாக உயர்த்தும் விதமாக, தமிழக முதலமைச்சர் வருகின்ற ஜனவரி மாதம் 07 மற்றும் 08 தேதிகளில் "சர்வ தேச முதலீட்டாளர்கள் மாநாடு 2024"-க்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தவும், வெளி நாடு மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த பல்வேறு முதலீட்டா ளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் முன்னோட்டமாக 100-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் ரூ.1500 கோடி அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    Next Story
    ×