என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்
- இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என டி.எஸ்.பி. பிரீத்தி கூறியுள்ளார்.
- நான் சைக்கிளில் செல்லும் வழியில் பொதுமக்கள், காவல் துறையினர் எனக்கு நல்ல வரவேற்பு அளித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள்.
ராஜபாளையம்
மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆயிசா மால்வியா (வயது24) உடற்கல்வி ஆசிரியரான இவர் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை பறைசாற்றவும், பெண்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வர முடிவு செய்தார்.
இதற்காக அவர் கடந்த ஆண்டு நவம்பர் 14-ந் தேதி மத்தியபிரதேசத்தில் இருந்து தன்னந்தனியாக சைக்கிளில் பயணத்தை தொடர்ந்தார். அங்கிருந்து மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கோவா, கர்நாடகா, கேரளா சென்று விட்டு தமிழகம் வழியாக வடமாநிலங்கள் நோக்கி செல்லும் அவர் ராஜபாளையம் வந்தடைந்தார்.
அவருக்கு ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள காவல்துணை கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் ஆயிசா மால்வியா நிருபர்களிடம் கூறியதாவது:-
நமது நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.
வழியில் எந்த விதமான அச்சுறுத்தலோ, இடையூறோ ஏற்பட்டதில்லை. இந்தியா வில் நடு இரவில் பெண்கள் அச்சமின்றி எப்போது நடமாட முடிகிறதோ? அப்போது தான் இந்தியா சுதந்திரம் பெற்ற முழு பயனை அடைய முடியும் என மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அவரது கனவு நனவாகி விட்டது.
நான் சைக்கிளில் செல்லும் வழியில் பொதுமக்கள், காவல் துறையினர் எனக்கு நல்ல வரவேற்பு அளித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். இது மகிழ்ச்சியாக உள்ளது. எந்த நோக்கத்திற்காக சைக்கிள் பயணத்தை தொடங்கினேனோ அதில் எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.