search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் விடுதிகள் கண்டிப்பாக உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும்
    X

    பெண்கள் விடுதிகள் கண்டிப்பாக உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும்

    • விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் விடுதிகள் கண்டிப்பாக உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும்.
    • 2 ஆண்டு காலம் வரை சிறைதண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகளை சமூகநலத்துறையின் மூலம் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் 2014-ன் கீழ் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் http://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர், மேலாளர் ஆகியோருக்கு சட்டப்பிரிவின் படி, 2 ஆண்டு காலம் வரை சிறைதண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

    மேலும் பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்: 04562-252701-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×