என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருகம்பாக்கத்தில் கால்வாயில் விழுந்த பெண்ணை மீட்ட போலீசார்
    X

    விருகம்பாக்கத்தில் கால்வாயில் விழுந்த பெண்ணை மீட்ட போலீசார்

    • கால்வாயில் பெண் ஒருவர் விழுந்து கிடந்தார். இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கம், நடேசன் நகர் பகுதியில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் சிறப்பு அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இவ்வழியாக செல்லும் கால்வாயில் பெண் ஒருவர் விழுந்து கிடந்தார். இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அருகில் இருந்த போலீசாரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தனர். சப் - இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ்காரர் வினோத் ஆகியோர் விரைந்து சென்று கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி எந்திரத்தின் கால்வாயில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

    அந்த பெண் யார்? அவர் எப்படி கால்வாயில் விழுந்தார் என்பது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×