என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை சென்னை விரைவு

- ராஜபாளையத்தில் வடமாநில தொழிலாளியின் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
- பின்னர் உடலை மாடியின் மேல் மறைவான இடத்தில் மறைத்து வைத்து விட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள ஸ்ரீரங்கபா ளையத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுசங்கர். இவர் சொக்கலிங்கபுரம் பகுதியில் பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார்.
இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீத்மான்ஜி (வயது 45) என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரீத்தி, தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சஞ்சீத்மான்ஜி யின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோ தனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தன்று சஞ்சீத்மான்ஜியுடன் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த சகோதரர்கள் திரோபான்ஜி, வினோ த்பானியா ஆகியோர் மது குடித்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த சகோத ரர்கள் சஞ்சீத்மான்ஜியை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
பின்னர் உடலை மாடியின் மேல் மறைவான இடத்தில் மறைத்து வைத்து விட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி யுள்ளனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சஞ்சீத்மான்ஜியை கொலை செய்த 2 பேரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு சென்னைக்கு சென்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை பிடிக்க ராஜபாளையம் போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.