search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதரவற்ற குழந்தைகள் காப்பக மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்
    X

    ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த மாணவிகளுடன் கலெக்டர் மேகநாதரெட்டி கலந்துரையாடினார்.

    ஆதரவற்ற குழந்தைகள் காப்பக மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

    • ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த மாணவிகளுடன் விருதுநகர் கலெக்டர் கலந்துரையாடினார்.
    • விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சூலக்கரை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாணவிகளுடன் "காபி வித் கலெக்டர்" என்ற 19-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி காப்பகத்தில் வசிக்கும் மாணவிகளுடன் கலந்துரையாடி 32 மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார்.

    இதில் பங்கேற்ற மாணவி களிடம் கலெக்டர் மேகநாத ரெட்டி அவர்களுடைய ஆர்வம், பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்ட றிந்தார். பின்னர் கலெக்டர் பேசுகையில், இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் ஒரு தனித்திறன் இருக்கும். அந்த திறமையை கண்டறிந்து தங்களை மெருகேற்றி கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் உங்களால் முடியாது, சாதிக்க முடியாது என்று யார் என்ன சொன்னாலும், நீங்கள் அதை நம்பி விடாமல், உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்.

    நீங்கள் உங்களுக்கென்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். நிறைய திறமைகள் உதாரணமாக எழுத்து, வாசிப்பு, பேச்சு திறமை, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான மொழி களை தேர்ந்தெடுத்து அதில் புலமை பெற வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இது உங்களை முழுமைப்படுத்தும். இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும். உங்கள் படிப்பு சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும்.

    இதைவிட மிக முக்கியமானது நீங்கள் நன்றாக படித்து, ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு, எப்பொழுதும் உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து உங்களை சுற்றி உள்ள வர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இது உங்களுடைய வேலை யில் நன்றாக பார்பதற்கும், முன்னேறுவதற்கும் உதவியாக இருக்கும். அடுத்து வாழ்க்கையில் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

    காப்பகத்தில் தங்கி படித்து வரும் மாணவிகளுக்கு தேவையான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான வழிமுறைகள் அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்து தரப்படும் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

    இதில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, வட்டாட்சியர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×