search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சி
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியில் நடந்த மணமக்கள் தேர்வை

    கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சி

    • விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தலைமை தாங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகரில் புதுவசந்தம் மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு, ராம்கோ சமூக சேவைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு சங்கம், கீதாபவன் அறக்கட்டளை இணைந்து மாற்றுத்திறனா ளிகளுக்கான சுயம்வரம் விழாவை நடத்தியது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    மாற்றுத்திறனாளிகளின் திருமண வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிக ளுக்கான சுயம்வரம் விழா தனியார் கூட்டமைப்பு சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகள் சார்பில் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க நல்ல வாய்ப்பாக இந்த விழா அமைந்துள்ளது.

    இதில் தேர்வு செய்யப்படுவோர், சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, திருமணம் நடத்தி வைக்கப்படும்.

    மேலும், மாற்றுத்திற னாளிகள் அனைத்து துறைகளிலும் மற்றவர்களுக்கு இணையாக சாதனை புரிந்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் மூலமும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, இந்தியா விலேயே முதன் முறையாக தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக உதயம் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் பிறர் உதவியை எதிர்பார்க்காமல், சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் தாங்களே எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில், குறிப்பாக மாற்றுத்திறனாளி பெண்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டும், சிரமத்தினை தவிர்க்கும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்ப ட்ட 100 நவீன கழிப்பறைகள் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனா ளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும் பட்சத்தில் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். மேலும், அனைவரும் மாற்றுத்திறனாளிகளை மற்றவர் என கருதாமல் தங்களில் ஒருவராக பழக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிர்வாக தலைவர் ராமலிங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் சிம்மசந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, மாவட்ட நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜராஜேசுவரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×