search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு உரிமையாளர்களுடன் நீரி அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    பட்டாசு உரிமையாளர்களுடன் நீரி அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • பட்டாசு உரிமையாளர்களுடன் நீரி அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் வருகிற 9-ந்தேதி நடக்கிறது.
    • தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

    சிவகாசி

    தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் கூறியதாவது:-

    பட்டாசு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பசுமை பட்டாசு தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் பசுமை பட்டாசு குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்ற உத்தரவின்படி நீரி அமைப்பு பசுமை பட்டாசு குறித்து ஆய்வு செய்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி யாளர்கள் பலர் நீரியுடன் பசுமை பட்டாசு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து பசுமை பட்டாசு தயாரிக்க தொடங்கினர்.

    தொடர்ந்து நீரி பசுமை பட்டாசு குறித்த பார்முலாவை இணைய தளத்தில் வெளியிட்டது. அந்த பார்முலாவை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பட்டாசு தயாரித்து வருகிறார்கள். பின்னர் பட்டாசு உற்பத்தியாளர்கள் நீரி பார்முலா படி தயாரித்த பட்டாசுகளை நீரிக்கு சோதனைக்காக அனுப்பி அதற்கான சான்று மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை பட்டாசு ஆலைகள் பின்பற்றுகிறதா? என சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தனர்.விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன.

    இந்த ஆலை உரிமையாளர்கள் பசுமை பட்டாசு தயாரிக்க இதுவரை நீரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால் 9-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் முகாமில் அவர்கள் நீரி யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

    இந்த முகாம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இந்த முகாமிற்கு நீரி அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு 8 பேர் சிவகாசி வருகிறார்கள்.

    இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நீரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×