என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்பாக்கம் பாவினி அணுமின் நிலையத்தில் இலவச தொழில் பயிற்சி
    X

    கல்பாக்கம் "பாவினி" அணுமின் நிலையத்தில் இலவச தொழில் பயிற்சி

    • 50 பேருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில், உதவித்தொகை கொடுத்து தொழில் பழகுனர் பயிற்சி கொடுக்க உள்ளது.
    • விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி ஆகும்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுசக்தி துறை வளாகத்தில் "பாவினி" எனப்படும் பாரதிய நாபிக்ய வித்யூத் நிகாம் அணுமின் நிறுவனம், 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முன்மாதிரி அதிவேக ஈனுலை கட்டி வருகிறது. இந்நிறுவனம் 50 பேருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில், உதவித்தொகை கொடுத்து தொழில் பழகுனர் பயிற்சி கொடுக்க உள்ளது.

    இதில் பிட்டர்.10, கெமிக்கல் பிளான்ட் மெயின்டனன்ஸ் மெக்கானிக்.8, இன்ஸ்ரூமென்ட் மெக்கானிக்.11, எலக்ட்ரீஷியன்.11, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்.3, ரெப்ரிஜரேஷன், மெக்கானிக், ஏசி மெக்கானிக்.3, மெக்கானிக்கல் டிராப்ஸ்மேன்.2, போட்டோகிராபர்.1, மெசினிஸ்ட், டிஜிட்டல் போட்டோகிராபர்.1, என பயிற்சி அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி ஆகும். கூடுதல் விபரங்களை https://bhavini.nic.in என்ற இணையத்தில் அறியலாம்.

    Next Story
    ×