என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்வா் கோப்பைக்கான வாலிபால் போட்டி - ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி அணி முதலிடம்

- அரசுப் பெண் ஊழியா்களுக்கான பொதுப்பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன.
- கணக்கம்பாளையம் ஸ்டாா் வாலிபால் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
திருப்பூர் :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான வாலிபால் போட்டிகள் ஜெய்வாபாய் நகர பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மாணவிகளுக்கான பிரிவில் 15 அணிகளும், கல்லூரி மாணவிகளுக்கான பிரிவில் 7 அணிகளும், அரசுப் பெண் ஊழியா்களுக்கான பிரிவில் 4 அணிகளும், பெண்கள் பொதுப்பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன.
இதில் பள்ளி மாணவிகளுக்கான பிரிவில் ஜெய்வாபாய் நகர பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், வேலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இரண்டாவது இடத்தையும், இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூன்றாவது இடத்தையும் பிடித்தது. அதேபோல, கல்லூரி மாணவிகளுக்கான பிரிவில் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரி முதலிடத்தையும், காங்கயம் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி இரண்டாவது இடத்தையும், உடுமலை ஜிவிஜி. விசாலாட்சி பெண்கள் கல்லூரி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
அரசுப் பெண் ஊழியா்களுக்கான பிரிவில் ஜெய்வாபாய் நகர பெண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியைகள் அணி முதலிடத்தையும், ஜெய்வாபாய் ஆசிரியைகள் அணி இரண்டாவது இடத்தையும், தாராபுரம் ஆசிரியைகள் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது. பெண்களுக்கான பொதுப் பிரிவில் அா்ஜூா அவாா்டிஸ் வாலிபால் கிளப் முதலிடத்தையும், டைமண்ட் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் அணி இரண்டாவது இடத்தையும், கணக்கம்பாளையம் ஸ்டாா் வாலிபால் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.