என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்க அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள் - சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
- சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.
- சிறுபான்மையின மக்கள், தமிழக மக்கள் உரிமையை காப்பது எங்கள் தேர்தல் முழக்கம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. வரவேற்றார். மகளிர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம்
தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார். மக்களைப் பற்றி கவலைப்படாத பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்கிறார். தென்காசி மாவட்டத்துக்கு ஒரு திட்டத்தையாவது கொண்டு வந்தாரா?. எல்லாமே அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள்தான். அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார்.
தென்காசி மாவட்டம் உதயமானது அ.தி.மு.க. ஆட்சியில். கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இன்னும் பல்வேறு அலுவலகங்கள் கட்ட அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டது. இப்போது முடிவடைந்த திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த சில திட்டங்களை தி.மு.க. கிடப்பில் போட்டுள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.
மக்கள் ஏமாற்றம்
சங்கரன்கோவில் தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. அரசு கலை கல்லூரி, ஆட்டின ஆராய்ச்சி மையம், எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம், ரூ. 543 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் இன்னும் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். கல்விக் கடனை ரத்து செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டனர். மக்களை ஏமாற்றியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. அனைத்து குடும்பத் தலைவி க்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருவோம் என்றார்கள். இதனை தி.மு.க.வினரை பார்த்து பார்த்து கொடுத்து வருகின்றனர்.
40 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதை பார்த்து முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது. இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடிந்ததா?. தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் தமிழக மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.
அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து, தேர்தலில் வெற்றி பெறுவோம். சிறுபான்மையின மக்கள், தமிழக மக்கள் உரிமையை காப்பது எங்கள் தேர்தல் முழக்கம். மக்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். யாருக்கும் அ.தி.மு.க. அஞ்சியதில்லை, அஞ்சப்போவதுமில்லை. 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெல்லும், மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். கொள்ளையடிப்பதுதான் தி.மு.க.வின் குறிக்கோள். மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன், அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், தளவா ய்சுந்தரம், பி.ஜி. ராஜேந்திரன், சுதா பரமசிவம், ஏ.கே. சீனி வாசன், மாவட்ட செயலா ளர்கள் தச்சை கணேசராஜா, செல்வமோகன்தாஸ் பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., மாநில வக்கீல் அணி செயலாளர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே.ஆர்.பி. பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆவரைகுளம் பால்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் எம்.பி. சவுந்தர்ரா ஜன், மாவட்ட மகளிரணி செயலாளரும், திசைய ன்விளை பேரூராட்சி தலைவரு மான ஜான்சிராணி, தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சந்திரகலா, முன்னாள் நெல்லை சட்டமன்ற தொகுதி செயலாளரும், முன்னாள் நெல்லை நகர கூட்டுறவு வங்கி தலைவ ருமான பால்கண்ணன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மானூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செந்தில்கு மார், பாசறை பொருளாளர் முருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பரமகுருநாதன், குருவிகுளம் ஒன்றிய பேரவை செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், சுப்பையா பாண்டியன், ரமேஷ், செல்வராஜ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் இளசை தேவராஜ், நகர பேரவை செயலாளர் கவுந்தர் என்ற சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி பி.ஜி.பி .ராமநாதன், நகராட்சி கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், நெல்லை மாநகராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் முத்துலெட்சுமி சண்முகபாண்டியன், ஆலங்குளம் முன்னாள் ஒன்றிய செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பாண்டியராஜ், நெல்லை 15-வது வட்டசெயலாளர் பாறை மணி, நெல்லை மேற்கு பகுதி பொருளாளர் காளி முருகன், இளைஞரணி விஷ்வகணேஷ், மூலைக்கரைப்பட்டி நகர துணைச்செயலாளர் எடுப்பல் காளிமுத்து, ஆலங்குளம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜாண்ரவி, ஆலங்குளம் பேரூர் துணைச்செயலாளரும், 12-வது வார்டு கவுன்சிலருமான சாலமோன்ராஜா, நெல்லை மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் பள்ளமடை பாலமுருகன், கருவந்தா இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருன்மத்தேயு, புளியங்குடிநகர இளைஞரணி தலைவர் செல்வ சந்திரசேகரன், புளியங்குடி 1-வது வார்டு கவுன்சிலர் லெட்சுமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும் மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்