என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சிவகிரியில் வாக்காளர் சிறப்பு முகாம் சிவகிரியில் வாக்காளர் சிறப்பு முகாம்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/14/1791758-sivagirivoterscamp.jpg)
முகாமை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் பார்வையிட்ட காட்சி.
சிவகிரியில் வாக்காளர் சிறப்பு முகாம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
- தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சி பகுதியில் 24 மையங்களில் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டவர்கள், புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாம்களில் நடக்கும் பணிகளையும், வாக்குசாவடி முகவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளையும் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும் சிவகிரி பேரூர் செயலாளருமான செண்பகவிநாயகம் முன்னிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் இறப்பு, இரட்டை பதிவுகள், இடம் மாறியவர்கள் விபரம் முக்கியமாக அறிவுறுத்தப்பட்டது.
முகாமில் அவைத்தலைவர் துரைராஜ், வாக்கு சாவடி முகவர்கள் வீரமணி, ரூபன் குமார், கணேசன், பிச்சை மணி, மாரித்துரை, ராமசந்திரன், இளையராஜா, மதுரை வீரன், வீரபாண்டியன், திருமலைக்குமாரசாமி, அனந்தபிள்ளை, கவுன்சிலர்கள் கிருஷ்ணலீலா, முத்துலெட்சுமி தங்கராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கார்த்திக், வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.