search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு முறையான நிவாரணம் வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
    X

    ஆர்.டி.ஓ லதா தலைமையில் கூட்டம் நடந்தது.

    விவசாயிகளுக்கு முறையான நிவாரணம் வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

    • தாலுக்கா அலுவலகம் முன்பு சமைத்து உண்டு உறங்கி தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
    • ஆர்.டி.ஓ லதா தலைமையிலும், தாசில்தார் பூங்கொடி முன்னிலையிலும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுக்கா அலுவலகம் முன்பு சமைத்து உண்டு உறங்கி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

    இது குறித்து கும்பகோணம் ஆர்.டி.ஓ லதா தலைமையிலும், தாசில்தார் பூங்கொடி முன்னிலையிலும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பண்டாரவாடை மற்றும் அரையபுரம் வடிகால் நீர்வளத் துறையின் சார்பில் வாய்க்கால் விரைவில் தூர்வாரும்பனிகள் மேற்கொள்ளப்படும், விவசாயிகளுக்கு முறையாக நிவாரணம் வழங்கிட வேளாண்மை துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்,

    கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படும், பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் கழிவறை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உட்பட 15 அம்ச கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் தீர்வு மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள், போராட்ட குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுமூக தீர்வு காணப்பட்டதால் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

    Next Story
    ×