search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருச்செங்கோட்டில் அனுமதியின்றி ெசயல்பட்ட நெய்  கம்பெனிக்கு எச்சரிக்கை நோட்டீஸ்
    X

    கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி.

    திருச்செங்கோட்டில் அனுமதியின்றி ெசயல்பட்ட நெய் கம்பெனிக்கு எச்சரிக்கை நோட்டீஸ்

    • திருச்செங்கோட்டில் ஒரு சில கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என கடுமையாக எச்சரித்தனர்.
    • தனியார் நெய் கம்பெனி நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது அந்த கம்பெனி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இன்றி செயல்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர பகுதிகளில் உள்ள 33 வார்டுகளிலும் டீக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட கடைகள் உள்ளன். இங்கு திருச்செங்கோடு நகராட்சி அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    ஆயில் கண்டு பிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்த முடியாதவாறு அழிக்கப்பட்டது . ஒரு சில கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர் . மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என கடுமையாக எச்சரித்தனர்.

    தொடர்ந்து அங்குள்ள ஒரு தனியார் நெய் கம்பெனி

    நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது அந்த கம்பெனி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இன்றி செயல்பட்டு வருவது கண்டு

    பிடிக்கப்பட்டது.

    இதை யடுத்து அந்த நிறுவனத்திற்கு அனுமதி

    பெறுமாறும் இல்லை யென்றால் சீல் வைக்கப்ப டும் எனவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    Next Story
    ×