search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்
    X

    நகர்மன்ற கூட்டம் நடை பெற்றது. 

    கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்

    • நீர்தேக்கத்தொட்டி சுத்தம் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
    • சாலை களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற சாதார ணக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் ஹேமலதா, துணை தலைவர் சுப்பராயன், பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் முன்னிலை வகித்தனர்.

    இளநிலை எழுத்தர் ராஜகணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    பாலமுருகன்(சுயே) மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாதபோது, தேர்வடக்கு வீதியில் புதிய மழைநீர் வடிகால் அவசிய மின்றி கட்டப்படுகிறது. ஈசானியத்தெருவில் கழிவுநீர் முழுவதும் வந்து தேங்கிநிற்கிறது.

    இதனால் கொசுதொல்லை அதிகமாக உள்ளது.கொசுமருந்து அடிப்பதில்லை என்றார்.

    நித்தியாதேவி(சுயே) : எனது வார்டில் அனைத்து சாலைகளும் பழுதாகியுள்ளது.சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    நாகரத்தினம்(அதிமுக): எனது வார்டில் பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    தேவதாஸ்(திமுக): எனது வார்டில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பலமாதங்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.இதனை சரிசெய்யவேண்டும்.

    சூரியபிரபா : எனது வார்டில் உள்ள இரண்டு நகர்களில் சாலை அமைக்கும் பணி துவங்கி பல மாதம் ஆகியும் முழுமை பெறவில்லை. குடிநீர் பைப் லைன் உடைந்து குடிநீர் வீனாகி வருகிறது இதனை சரிசெய்யவேண்டும்.

    ராமு(திமுக) மீன்மார்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவேண்டும். கொள்ளிடமுக்கூட்டில் எரியாமல் உள்ள மின்விளக்கு களை சரிசெய்யவேண்டும் என்றார்.

    முபாரக்அலி(திமுக) பழையபேருந்துநிலையம் அருகேயுள்ள குறுகிய பாலத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடந்துவருகிறது.இதற்கு பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டவேண்டும்.

    ராஜசேகர் :(தேமுதிக)எனது வார்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை யோரம்தேங்கி நிற்கிறது இதனை சீரமைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரியும் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை விரைவில் சீரமைக்க விட்டால் கழிவு நீரில் இறங்கி போராட்டம் நடத்துவேன் என்றார்.

    ஜெயந்திபாபு(சுயே.) எனது வார்டில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் தேங்கி பலமாதங்க ளாக நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுதொல்லை அதிகரித்துள்ளது.சாலை களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

    உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சாமிநாதன்(திமுக) : பழையபேருந்துநிலைய கட்டண கழிப்பறை கழிவுநீர் இரட்டை காளியம்மன் தெருவில் உள்ள கால்வாயில் விடப்படுகிறது.

    இதனால் அதிகளவு கொசுஉற்பத்தியாகி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    இவ்வாறு கூட்டம் நடை பெற்றது.

    Next Story
    ×