என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நீர்வரத்து குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
Byமாலை மலர்24 Nov 2022 3:22 PM IST
- நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி வந்தது.
- மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு போன்ற நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 5-ந்தேதி முதல் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி வந்தது.
மேலும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு போன்ற நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 5-ந்தேதி முதல் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனவே சுற்றுலாப்பயணிகள் குளிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அருவியில் நீர்வரத்து குறைந்து அருவியில் சீராக தண்ணீர் விழுவதால் 18 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப்பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதி அளித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா தெரிவித்துள்ளார்.
Next Story
×