search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிமுத்தாறு அணையில் 2-வது ரீச்சில் இருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
    X

    கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்த விவசாயிகள்.

    மணிமுத்தாறு அணையில் 2-வது ரீச்சில் இருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

    • மணிமுத்தாறு நீர் தேக்கத்தில் 3, 4வது ரீச்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
    • பள்ளி கொடிக்கம்பத்தில் மர்ம நபர்கள் சமுதாய கொடியை ஏற்றி உள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பிரதான கால்வாய் 2-வது பிரிவு விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவ லகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    முன்னுரிமை அடிப்படை

    எங்கள் பகுதியில் உள்ள குளங்களில் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு செய்த மழை நீரை கொண்டு விவசாயம் செய்தோம். தற்பொழுது அந்த பயிர்களில் நெற்கதிர்கள் வளர்ந்துள்ளது.

    இந்த ஆண்டு மணிமுத்தாறு நீர் தேக்கத்தில் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் பெருகி உள்ள காரணத்தினால் மூன்று மற்றும் நான்காவது ரீச்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு உத்தரவுப்படி நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் முறை வைத்து தண்ணீர் பாய்த்து கொண்டிருக்கிறார்கள்.

    கருணை அடிப்படையில் அணையில் இருக்கின்ற தண்ணீரை 100 மில்லியன் கன அடி மட்டும் 2-வது ரீச்சில் எங்கள் பகுதி மடைகளில் திறந்து அருகில் உள்ள பயிர்களை காப்பாற்றிட தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    பொதுமக்கள் மனு

    கங்கைகொண்டான் அருகே உள்ள வடகரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 17-ந் தேதி மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள கொடிக்கம்பத்தில் சமுதாய ரீதியிலான கொடியை ஏற்றி உள்ளனர். இது தொடர்பாக தேசிய கொடி ஏற்றும் கம்பத்தை அவமதித்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    கருப்பு துணி கட்டி மனு

    தமிழர் உரிமை பாது காப்பு கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் தமிழ்மாறன் தலைமையில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் நுழைவாயில் முன்பு வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், ராம்குமார் சிறை படுகொலை வழக்கை நடத்தி வரும் முன்னாள் நீதிபதி ராமராஜ் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    சுற்றுச்சூழல் மற்றும் நதிகள் பாதுகாப்பு சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் அமூஸ் முருகன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலை சுற்றி அமைந் துள்ள வெளி மதில் சுவரை ஒட்டி ஏராளமான தனியார் கடைகள் அமைந்துள்ளது.

    இந்த கடைகளை அப்புறப்படுத்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச்சுவர் போல மாற்ற வேண்டும். இதன் மூலம் கோவிலின் சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    Next Story
    ×