என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடுமையாக நிலவும் வெப்பத்தை தணிக்க பக்தர்கள் செல்லும் சாலையில் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் தெளிப்பு- ஆறுமுகநேரியில் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு
- தார்ச்சாலை வெப்பத்தால் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
- பாத யாத்திரை பக்தர்கள் தங்குவதற்கான மையத்தில் குளிர்பானம் வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
விசாக திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவி லுக்கு பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்ற னர்.
சாலையில் தண்ணீர்
இதன்படி அவர்கள் நேற்று கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் போது வெயிலின் உக்கிரத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டனர். அத்துடன் தார்ச்சாலை வெப்பத்தால் சூடு தாங்காமல் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையிலான பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம், துணைத்தலைவர் கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் ஏற்பாட்டில் பக்தர்கள் செல்லும் சாலைகளில் டிராக்டர்கள் மூலம் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பக்தர்கள் மகிழ்ச்சி
இதனால் ஏற்பட்ட குளுமை காரணமாக பக்தர்கள் மகிழ்ந்தனர். மேலும் பேரூராட்சியின் பாத யாத்திரை பக்தர்கள் தங்குவதற்கான மையத்தில் குளிர் பானம் இலவசமாக வழங்கப்பட்டது. இரவு நேரத்தில் விபத்து களை தவிர்க்கும் வகையில் ஒளிரும் ஸ்டிக்க ர்களை பக்தர்களின் பின்புறம் ஒட்டு வதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டன.
இதில் வார்டு கவுன்சி லர்கள் வெங்கடேஷ், ஆறுமுக நயினார், பேரூ ராட்சி சுகாதார மேற்பார் வையாளர் கார்த்திக் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.