என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
- மனுதாரர்களுக்கு உரிய பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
- 6 பேருக்கு ஒளிரும் மடக்கு குச்சிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி:
தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 265 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இந்த மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனு தாரர்களுக்கு உரிய பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8,500 செலவில் காதொலி கருவிகளும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள் தலா ரூ.8,500 செலவிலும் ஆக மொத்தம் ரூ.68 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட வழங்கள் அலுவலர் சுதா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் நடராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.