search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி புதுக்கோட்டை  வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் - விக்கிரமராஜா வழங்கினார்
    X

    விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி. 

    தூத்துக்குடி புதுக்கோட்டை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் - விக்கிரமராஜா வழங்கினார்

    • புதுக்கோட்டை பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்ட மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று விக்கிரமராஜா கூறினார்.
    • விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    சங்க தலைவர் பீட்டர் தலைமை தாங்கி சங்க வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா,தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், புதுக்கோட்டை பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்ட மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

    மாநிலத் துணைத் தலைவர் வெற்றிராஜன், தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளர் செந்தில்குமார், மகளிர் அணி செயலாளர் ராஜம், தூத்துக்குடி 3-ம் மைல் வியாபாரி சங்க தலைவர் ஜெயபாலன், ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவர் அன்புராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    புதுக்கோட்டை வியாபாரிகள் சங்க பொருளாளர் ராபின்சன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதுக்கோட்டை கிளை மேலாளர் கணேச பாண்டியன்,குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரைமணி, துணைத் தலைவர் முப்பிலி யன், தூத்துக்குடி மாவட்ட மருந்து வியாபாரி சங்கத் தலைவர் முனியசாமி, வியாபாரிகள் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகளான தர்மராஜ், தாமோதரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    விழாவில் ஏழை எளியவருக்கு தையல் எந்திரம், மாணவ -மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை, பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் புதுக்கோட்டை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம்,பரத்,ராஜன் ஆகியோர் வழங்கிய கண்காணிப்பு காமி ராக்களை 3 முக்கிய சந்திப்புகளில் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி பொருத்தி திறந்து வைத்தார்.

    நெல்லை- தூத்துக்குடி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பால பணி நிறைவு பெறும்போது கனரக வாகனங்கள் புதுக்கோட்டை ஊருக்குள் வர முடியாத நிலை ஏற்படும். எனவே பழைய பாலம் அருகே புதிய பாலம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சங்க துணை தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×