என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் ரூ.11.81 கோடி மதிப்பில் 136 பயனாளிகளுக்கு நலத்திட்டப்பணிகள்
- அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தனர்
- ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டனா்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டி சேரிங்கிராஸ் தோட் டக்கலைத் துறை கூட்ட ரங்கில் மாவட்ட தொழில் மையம், மகளிா் திட்டம், தாட்கோ, ஆவின், வாழ்ந்து காட்டுவோம், தோட்டக்க லைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறு துறை கள் சாா்பில் கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு மற்றும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
சுற்றுலா அமைச்சா் ராமசந்திரன், நீலகிரி எம்.பி ராசா ஆகியோா் 136 பயனாளிகளுக்கு ரூ.11.81 கோடி மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் சுற்றுலா அமைச்சா் ராமச்சந்திரன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் தேயிலை, காபி தூள் தயாரித்தல், மசாலா பொருட்கள் தயாரித்தல், வாசனை திரவியங்கள் தயாரித்தல், சாக்லெட், வா்க்கி தயாரித்தல், கேரட் கழுவும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்க வாய்ப்பு உள்ளது.
மேலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சுயமாக தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்களில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை அறிந்து தொழில் தொடங்கி வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை உயா்த்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.
பின்னா் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வாழ்ந்து காட்டுவோம், மாவட்ட முன்னோடி வங்கி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் ஆகிய துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் (பொ) கீா்த்தி பிரியதா்ஷினி, தோட்டக்க லைத் துறை இணை இயக்குநா் ஷபிலாமேரி, ஆவின் பொதுமேலாளா் ஜெயராமன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சண்முகசிவா, தாட்கோ பொது மேலாளா் ரவிசந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்