search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே  பேராசிரியர் வீட்டில் ரூ.7 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார்?- சி.சி.டி.வி. மூலம் போலீசார் விசாரணை
    X

    கடையம் அருகே பேராசிரியர் வீட்டில் ரூ.7 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார்?- சி.சி.டி.வி. மூலம் போலீசார் விசாரணை

    • தென்காசியில் உள்ள தனியார் கல்லூரியில் மன்சூர் அலிகான் பணியாற்றி வருகிறார்.
    • கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் மன்சூர் அலிகான் (வயது 45). இவர் தென்காசியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தென்காசியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

    நகை-பணம் கொள்ளை

    இதனால் அவ்வப்போது மட்டும் முதலியார்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வார். சமீபகாலமாக வாரத்தில் ஒருநாள் முதலியார்பட்டிக்கு வந்து நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை முதலியார்பட்டியில் உள்ள வீட்டிற்கு அவர் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ.7 லட்சம் பணம் மற்றும் 28 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    விசாரணை

    இதுகுறித்து தகவலறிந்த தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், ஆலங்குளம் பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தெய்வம், கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நாய் சிறிது தூரம் அங்கும் இங்குமாக ஓடியது. அப்பகுதியில் உள்ள 2 தெருக்களில் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    சி.சி.டி.வி. ஆய்வு

    இதுதொடர்பாக கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சமீபகாலமாக இப்பகுதியில் ஆட்டோ பேட்டரி, செல்போன் திருட்டு என சுமார் 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. எனவே இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×