என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அருமனை அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்தது ஏன்?
- கடன் தொல்லை மற்றும் உடல்நிலை பிரச்சினையால் தற்கொலை
- அருமனை போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
அருமனை அருகே சிதறால் வெள்ளாங்கோடு வாழை விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை (வயது 47) கொத்தனார்.
இவரது மனைவி ராஜே ஸ்வரி (45). இவர்களது மகள் நித்யா (26). ராஜேஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் கிருஷ்ண பிள்ளை மனம் உடைந்து காணப்பட்டார். மகள் நித்யாவிற்கும் கடன்களை வாங்கி சிரமப்பட்டு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.
ஆனால் நித்யாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நித்யா கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணபிள்ளை, ராஜேஸ்வரி, நித்யா ஆகிய 3 பேரும் படுக்கை அறையில் விஷம் குடித்து பிணமாக கிடந்தனர். இதை பார்த்த கிருஷ்ண பிள்ளையின் தாயார் கதறி அழுதார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.
பின்னர் அருமனை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பிணமாக கிடந்த கிருஷ்ணபிள்ளை, ராஜே ஸ்வரி, நித்யா ஆகிய 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன்னதாக மனைவி, மகளுக்கு கிருஷ்ணபிள்ளை இறுதி சடங்கை நிறை வேற்றியது தெரியவந்தது. மேலும் கிருஷ்ணபிள்ளை எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
அந்த கடிதத்தில் தனது மனைவியின் நகைகளை வீட்டின் அருகில் உள்ள ஒரு பெண்மணியின் பெயரில் அடகு வைத்துள்ளதாகவும், அந்த நகைகளை விற்று தங்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்றும் தங்களது உடலை எங்களுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் எழுதியிருந்தனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு கிருஷ்ணபிள்ளை, ராஜே ஸ்வரி, நித்யாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டது. ஒரே இடத்தில் அவர்களது உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது கடன் தொல்லை மற்றும் அவரது மனைவி யின் உடல்நிலை பிரச்சினையால் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணபிள்ளையின் மனைவி சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
இதனால் மாதத்திற்கு 4 முறை ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளனர்.
தற்கொலைக்கு சில நாட்களுக்கு முன்பும் இவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தனர். அப்போது அதிக பணம் செலவாகி உள்ளது. நகைகளை அடகு வைத்து பணத்தை செலவு செய்து வந்துள்ளார்.
மகளும் கணவரை விட்டு பிரிந்து வந்த வருத்தம் கிருஷ்ணபிள்ளைக்கு இருந்து வந்தது. இதனால் 3 பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்து இந்த விபரீத முடிவை எடுத்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அருமனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்