search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டு பன்றிகள் - விவசாயிகள் கவலை
    X

    சேதமடைந்த வாழைகள்.

    களக்காடு அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டு பன்றிகள் - விவசாயிகள் கவலை

    • களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலாங்குளம் பத்து விளைநிலங்களில் நேற்று இரவில் 20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது.
    • வாழைகள் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலாங்குளம் பத்து விளைநிலங்களில் நேற்று இரவில் 20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது.

    அவைகள் வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்றன. இதனால் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானதாக விவசாயிகள் தெரிவித்தனர். இவைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்த 6 மாத வாழைகள் ஆகும்.

    பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட வாழை கள் கீழவடகரையை சேர்ந்த விவசாயிகள் பாலன், பூபேஸ் குப்தா, மகேந்திரன் ஆகியோர்களுக்கு சொந்த மனாது ஆகும்.

    வாழைகள் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, களக்காடு பகுதியில் அதிகரித்து வரும் காட்டு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×