என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகள்-களக்காடு விவசாயிகள் தவிப்பு
Byமாலை மலர்3 March 2023 2:31 PM IST
- விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் நெற்பயிர்களை நாசம் செய்தது.
- காட்டுபன்றிகள் தொடர்ந்து இப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றன.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகன் (41). விவசாயி.
இவருக்கு சொந்தமான விளைநிலங்கள் பச்சையாறு அணைக்கு செல்லும் வழியில் பாழம்பத்து பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவில் இவரது விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் 1 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை நாசம் செய்தது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களை பன்றிகள் நாசம் செய்ததால் அவருக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் காட்டுபன்றிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இதனைதொடர்ந்து விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். எனவே காட்டு பன்றிகளால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
×