search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை டவுன் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகள்
    X

    காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய நெற்பயிர்களை வேதனையுடன் பார்க்கும் விவசாயி.

    நெல்லை டவுன் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகள்

    • விவசாய நிலங்களில் புகுந்த காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை நாசம் செய்தது.
    • விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் மேலகுன்னத்தூர் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

    காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

    தற்போது அந்த நெற்ப யிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மேலகுன்னத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்த காட்டுப்பன்றிகள் அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை நாசம் செய்தது.

    இன்று காலை வயல்பகுதிக்கு சென்ற விவசாயிகள் நாசமான பயிர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, நாங்கள் கஷ்டப்பட்டு அதிகளவு நிலத்தில் நெல் நடவு செய்துள்ளோம்.

    விவசாயிகள் கோரிக்கை

    தற்போது அவை அறுவடைக்கு தயாராக இருந்தது. ஆனால் காட்டுப்பன்றிகள் புகுந்து அதனை நாசம் செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    எனவே காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×