என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கோத்தகிரி அருகே குடியிருப்பில் உலா வந்த காட்டு யானைகள் கோத்தகிரி அருகே குடியிருப்பில் உலா வந்த காட்டு யானைகள்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/27/1856226-1756613-201806110329434690people-are-afraid-of-wild-elephants-near-palanisecvpf.gif)
X
கோத்தகிரி அருகே குடியிருப்பில் உலா வந்த காட்டு யானைகள்
By
மாலை மலர்27 March 2023 3:18 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கூக்கல்தொரை பகுதியை சுற்றிலும் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன.
- காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியை சுற்றிலும் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் தற்போது சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் குட்டிகளுடன் வந்து, இங்குள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உலா வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளதால், பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் மற்றும் காய்கறி விவசாயிகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story
×
X