என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமாக காணப்படும் மணல் சாலை.
குண்டும் குழியுமான பாதை தார்சாலையாக மாற்றப்படுமா?
- சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி மணல்மேடு கிராமம் உள்ளது.
இங்கு சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு காய்கறி சாகுபடியே பிரதான தொழிலாக உள்ளது.
இக் கிராமத்திலிருந்து அடுத்து உள்ள மீனவர் காலனி செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கப்பி மற்றும் மணல் சாலையாகவே உள்ளது.
இதனால் இவ்வழியே செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என விவசாயிகள் மிகவும் சிரமப்படு கின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் வாகன ஒட்டிகள் பெரிதும் அவதி அடைகிறார்கள்.
இதனால் இந்த சாலையை தார் சாலையாக மாற்றி அமைத்துதர வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






