search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாழ்வாக செல்லும் மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா?
    X

    சாய்ந்த நிலையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்.

    தாழ்வாக செல்லும் மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா?

    • மின்கம்பிகள் சீரமைக்கபடாமல் மிகவும் தாழ்வான நிலையில் செல்கின்றன.
    • போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி,மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இந்த மழையில் திட்டச்சேரி, திருமருகல்,போலகம்,இடையாத்தங்குடி,ஏனங்குடி,கருப்பூர்,வடகரை,திருப்புகலூர், கணபதிபுரம்,நெய்குப்பை, மருங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் அருந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதமடைந்தது.

    இதனால் ஒன்றிய பகுதிகளில் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சேதம் அடைந்த மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    ஆனால் ஒன்றிய பகுதிகளில் பல இடங்களில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் சீரமைக்க ப்படாமலும், மின்கம்பிகள் முழுவதுமாக சீரமைக்காமல் மிகவும் தாழ்வாகவும் உள்ளன.

    இதனால் காற்று சற்று வேகமாக வீசும்போது மின்கம்பிகள் அறுந்து கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நேரிடுகிறது.

    இதனால் மனிதர்கள் உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடி க்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்க ளை சீரமைப்பதுடன், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயரத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×