search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை பஸ் நிலைய விரிவாக்கப்பணி விரைந்து முடிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம்

    உடுமலை பஸ் நிலைய விரிவாக்கப்பணி விரைந்து முடிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

    • டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழனி என 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பஸ் நிலைய விரிவாக்கப்பணிகளுக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    உடுமலை :

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் நிலையம் 1964ல் கட்டப்பட்டு, 1996ல் விரிவாக்கம் செய்யப்பட்டது.உடுமலை சுற்றுப்புற கிராமங்களுக்கு டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழனி என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பஸ்களும் இயக்கப்படுகின்றன.தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள்வந்து செல்கின்றனர். ஆனால் பஸ்கள் நிற்பதற்கான ரேக் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. போதிய வசதியில்லாத, இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில் இரு ஆண்டுக்கு முன் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பஸ் நிலைய விரிவாக்கப்பணிகளுக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    இதில் 15 பஸ்கள் நிற்கும் ரேக், 12 கடைகள், நேரக்காப்பாளர் அறை, பயணிகள் அமரும் வளாகம், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.பணி துவக்க விழா நடந்து 1½ ஆண்டுக்கு மேலாகியும் பணி துவங்காமல் இழுபறியாகி வந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் பணி துவங்கியது.

    துவங்கிய பணியும், ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. எனவே பஸ் நிலைய விரிவாக்கப்பணியை வேகமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×