என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் இணைப்புடன் ஆதார் இணைக்க  புதிய வழிமுறை
    X

    மின் இணைப்புடன் ஆதார் இணைக்க புதிய வழிமுறை

    • ஏதாவது ஒரு செல்போன் எண்ணை பதிவிட்டு அதில் வரும் ஓ.டி.பி., வாயிலாக ஆதாரை இணைக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
    • மின்நுகர்வோர் தாமதமின்றி ஆதாரை இணைக்க முன்வர வேண்டும் என்றனர்.

    திருப்பூர் :

    மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் ஓ.டி.பி., பெறுவதில் பல சிரமம் இருந்து வந்தது. அதாவது மின்நுகர்வோரின் ஆதார் அட்டையில் பதிவாகியுள்ள செல்போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., செல்வதால், செல்போன் எண்ணை மாற்றியவர்கள் ஆதார் இணைக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

    வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் வீட்டு மின் இணைப்புகளுக்கு எப்படி ஆதார் இணைப்பது என்ற சந்தேகமும் இருந்து வந்தது. இந்நிலையில் ஆதார் இணைப்பை 31 ந் தேதிக்குள் முடிக்க வேண்டியிருப்பதால் சிரமங்களை குறைத்து ஆதார் இணைக்கும் வகையில் புதிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஆதார் அட்டையில் உள்ள செல்போன் எண் கைவசம் இருந்தால் அதன் வாயிலாக, ஓ.டி.பி., பெற்று ஆதார் விவரத்தை இணைக்கலாம். ஆதார் அட்டையுடன் இணைத்த செல்போன் இல்லாதவர்கள், ஓ.டி.பி., இல்லாமலேயே ஆதார் இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலம் ஆதார் இணைக்க விரும்புவோர் கைவசம் உள்ள ஏதாவது ஒரு செல்போன் எண்ணை பதிவிட்டு அதில் வரும் ஓ.டி.பி., வாயிலாக ஆதாரை இணைக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 40 சதவீத இணைப்புகளில் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.ஏதாவது ஒரு செல்போன் எண்ணை பயன்படுத்தி ஆதாரை இணைக்கலாம்.ஆதார் அட்டையில் உள்ள செல்போன் எண் வாயிலாகவும் இணைக்கலாம். அதேபோல் வீட்டு உரிமையாளர், வாடகை வீட்டில் வசிப்போர், பெயர் மாற்றம் செய்யாத உரிமையாளரின் ஆதார் விவரத்தை இணைக்கலாம்.வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் வீட்டு இணைப்புக்கு நியமிக்கப்பட்ட உறவினர் ஒருவரின் ஆதார் விபரத்தை இணைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் தாமதமின்றி ஆதாரை இணைக்க முன்வர வேண்டும் என்றனர்.

    Next Story
    ×