என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடமதுரையில் கோவில் திருவிழாவில் நகை திருடிய தூத்துக்குடி பெண் கைது
- திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தியதை பார்த்துக் கொண்டிருந்தார்.
- அபிராமி பிடிபட்ட நிலையில் அவருடன் வந்த மேலும் 2 பெண்கள் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள தீத்தாகிழவனூரை சேர்ந்தவர் நீலாமணி (வயது19). இவர் தைப்பூசத்தை முன்னிட்டு அங்குள்ள பேசும் பழனியாண்டவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்றார்.
திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தியதை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கழுத்தில் இருந்த நகையை யாரோ பறிப்பதுபோல உணரவே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்தார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவர் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த அபிராமி (35) என தெரிய வந்தது. கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களுக்கு சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறிப்பதை இவர் வாடிக்கையாக வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
அபிராமி பிடிபட்ட நிலையில் அவருடன் வந்த மேலும் 2 பெண்கள் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.






