என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வால்பாறையில் சிறுத்தை தாக்கி பெண் காயம்
- தேயிலை செடியினுள் மறைந்து இருந்த சிறுத்தை சீத்தா முனிகுமாரியை தாக்கியது.
- உடனடி நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கினர்.
வால்பாறை,
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மதன் ஆரான். இவரது மனைவி சீத்தா முனிகுமாரி(23). இவர்கள் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றா எஸ்டேட்டில் தங்கி தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருகின்றர்.
நேற்று சீத்தா முனிகுமாரி தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தேயிலை செடியினுள் மறைந்து இருந்த சிறுத்தை சீத்தா முனிகுமாரியை தாக்கியது.
இதில் அவர் காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே சிறுத்தை சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்று விட்டது. இதையடுத்து அவர்கள் காயம் அடைந்த பெண்ணை வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை வனத்துறையினர் சந்தித்து, உடனடி நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கினர். மேலும் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, தி.மு.க. நகர செயலாளர் சுதாகர் ஆகியோரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.